வசவப்பபுரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலிசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்திஸ் மேற்பார்வையில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் இன்னோஸ்குமார், சுரேஷ்குமார், முதல்நிலைக் காவலர்கள் பெரும்படையான், உத்திரகுமார் மற்றும் காவலர் அருண்பாண்டியன் ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில் கீழபுத்தனேரியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் அந்த காரில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் மீது ஏற்கனவே முறப்பநாடு காவல் நிலையத்தில் கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட வழக்கும், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி ஜங்சன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்த முறப்பாடு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.


