வல்லநாட்டில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஓய்வு பெற்ற சாரா தக்கர் கல்லூரி பேராசிரியர்கள் / சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து கிறிஸ்துமலை முன்னிட்டு 5வது ஆண்டாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் -ஆல்பர் சேக்ரட் செல்வின் தலைமை வகித்தார்.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஸ்வினி ஜெனிபர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காசநோய் மைய நலக் கல்வியாளர் -தங்கவேல், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் சாரா தக்கர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கத்தின் சார்பாக ஏழை காசநோயாளிகளுக்கு சத்துணவை மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவஆல்பர் சேக்ரட் செல்வின் வழங்கினார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சார்பாக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வல்லநாடு காசநோயாளிகளுக்கு சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் பேராசியர்கள் மற்றும் முன்னாள் மாணவியர்ளான எஸ்தர் லயனல், லைமா சாமுவேல், மெர்சி ஹென்றி, ஜெனட் வில்சன், சிந்தியா பால், பிரேமலதா, நிர்மலா தங்கராஜ் ஆகியோர்களுக்கு நன்றிகளையும் கிருஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். காசநோயை ஒழிக்க அரசுத் துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் எனக் கூறினார்.
மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் டி.ஆர்.டி.பி.ஒருங்கணைப்பாளர் மாரியப்பன், சுகாதார உதவியாளர் முத்துகிருஷ்ணன் சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


