வல்லநாடு சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது பத்தாம் நாளில் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகத்திற்குப் பின் கோ பூஜை நடந்தது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன அர்சகர்கள் சண்முகசுந்தர பட்டர் சந்தோஷ் பட்டர், ஹரி பட்டர் குழுவினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, ஆய்வர் நம்பி, செயல் அலுவலர் கண்ணன், முறப்பநாடு காவல் ஆய்வர் பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


