2வருடம் கழித்து கடந்த 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. கடந்த கொரோனா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் 15 ந்தேதி முதல் விரைவு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் காலை 6.40 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பழனி வழியாக 3.45க்கு திருச்செந்தூரை வந்தடையும். , மற்றொரு தடத்தில் மதியில் 12.05க்கு கிளம்பி இரவு 8 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். இந்த விரைவு ரயில் திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்லும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என இரயில்வே துறை அறிவித்திருந்தது.
மேலும் இந்த ரயிலில் சாதாரண பயணிகளுக்கான பெட்டியும் இணைக்கப்படவில்லை இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் செய்துங்கநல்லூரிலும், தாதன்குளம் பஞ்சாயத்து தலைவர் சீதாலெட்சுமி தலைமையில் தாதன்குளம் ரயில் நிலையத்திலும்,ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வியாபாரி சங்கம் பொதுமக்களை திரட்டி மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் பரபரப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் பழனி & திருச்செந்தூர் எகஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.செய்துங்கநல்லூர் தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வழித்தடத்தில் நிறுத்தவே இந்த ரயில் ஒத்தி வைககப்பட்டது என நினைத்தார்கள். ஆனால் மறு நாளே 16 ந்தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி மககள் மீண்டும் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதியில் நிற்காது என கூறியவுடன் மீண்டும் வேதனை அடைந்து விட்டனர்.
இந்த ரயில் திருச்செந்தூர் பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் இயகக திட்டமிடபட்டுள்ளது. திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16 முதலும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 17 முதலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வண்டி எண் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பாலக்காடு – திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 04.55 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். என அறிவிககப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயிலிலும் செய்துங்கநல்லூர், தாதன்குளம் , ஸ்ரீவைகுண்டம் ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என அறிவித்துள்ளனர். எனவே இப்பகுதி மககள் மிகவும வருத்தம் அடைந்துள்ளனர். எனவே இன்று ரயில் வரும் வேளையில் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் , தாதன்குளம் ஆகிய இரயில் நிலையங்கள் ஆர்பாட்டம் செய்வது என பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


