கால்வாய் பஞ்சாயத்து திருவரங்கப்பட்டி குளம் , மணிமுத்தாறு பாசனம் மூன்றாவது ரீச்சில் உள்ள திருவரங்கப்பட்டி குளத்தில் தண்ணீர் பெருகினால் , கிணற்றுதண்ணீர் பெருகும் நிலை ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்திலேயே காய்கறிகளை மிக அதிகமாக விளைய வைக்கும் கிராமங்களில் திருவரங்கப்பட்டியும் ஒன்று. எனவே இவர்கள் கிணற்றுதண்ணீர் இல்லாத காலத்தில் போர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது திருவரங்கப்பட்டி குளம் நிறைந்து, மறுகால் விழுந்த காரணத்தினால் நிலத்தடி நீரும் உயர்ந்து விட்டது. இதனால் திருவரங்கப்பட்டி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்கிறார் திருவரங்கப்பட்டி ராஜா.


