வல்லநாட்டில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
பாளையங்கோட்டை மத்திய சித்த மருத்துவ ஆய்வு மையத்தி சார்பில் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் நினைவு ஆலயத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
இந்த மருத்துவ முகாமில் இருமல், தோல்நோய், மூட்டுவலி, நாள்பட்ட வியாதிகள், மூக்கடைப்பு உள்பட பல்வேறு வியாதிகளுக்கு மருந்து மாத்திரை தைலம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் சிவரஞ்சனி, ஹரிஹர மகாதேவன், மீரா மற்றும் சித்த மருத்துவர் செல்வகுமார், அலுவலர்கள் இசக்கியப்பன், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். வடவல்லநாடு பஞ்சாத்து தலைவர் பேபி சங்கர், மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து, தம்பான், தங்கபாண்டி, வட்டாரதலைவர் பிள்ளைமுத்து, பழனிச்சாமி, ராசாங்குளம் தலைவர் முருகன், சிதம்பரம், கடம்பாகுளம் பாசன சங்கத்தலைவர் உத்திரம், குழு நிர்வாகிகள் கந்தசாமி, ஐயப்பன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சாதுசிதம்பர சுவாமி அறக்கட்டளை நிர்வாகத்தினருடன் மாவட்ட விவசாயிகள் கூட்டறவு சங்கத்தினர் செய்திருந்தனர்.


