கருங்குளம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி கலைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி கலைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
முதல் நாள் பயணமாக கருங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள தெற்கு காரசேரி, புளியங்குளம், செய்துங்கநல்லூர், அய்யனாகுளம்பட்டி, தூதுகுழி போன்ற கிராமங்களில் பொதுமக்கள் கூடும் இடத்தில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதிகமான கல்வித் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் இனைந்திடவும், மாணவர்களுக்கு பொது நிகழ்வுகள், வாழ்வியல் தகவல்கள் குறித்தும் அறிவியல் சோதனைகள் கலை நிகழ்ச்சிகள் நலம் கற்றல் தொய்வு மற்றும் இடைநிற்றலை குறைக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
முத்துமணி சங்கர் கலைக்குழு நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்வி அலுவலர்கள் செல்வகுமார், பாலசுந்தரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, பீபேகம், மகாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


