கடந்த ஒரு மாத காலமாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி அண்ணாநகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்றுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


