பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்ததால் அனைத்து குளங்களிலும் மறுகால் பாய்ந்தது. இதன் காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய்யில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் ஊருக்கு இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை கோவில் வளாகத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களு அதிகாரிகள் கோவில் வளாகத்தில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.


