மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் பேட்டி.
தமிழகத்தில் வடகிழக்கு மழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் ஏராளமான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழபுத்தனேரி கிராமத்தில் 11 பேருக்கு சொந்தமான 13 ஏக்கரில் விவசாய நிலங்களில் பயிரிட்டப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியது.
இதற்கிடையில் இன்றைய தினம் கீழபுத்தனேரியில் பயிரிடப்பட்டு நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டார். அவர் சேதமான பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடைந்த பெட்டைகுளம் மடையை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன்பின்னர் பேட்டியில் தெரிவிக்கையில்,
தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் சேதமான இடங்களை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் செல்வின், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை துணை இயக்குனர் பழனி வேலாயுதம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன், வேளாண்மை அலுவலர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதி, கிராம நிர்வாக முத்து சகுந்தலா, விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


