நாலுமாவடியில் சுத்திகரிக்கப் பட்ட இலவச குடிநீர் விநியோகத்தை சகோ. மோகன் சி.லாசரஸ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் உரிய நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் சமுதாய நலப் பணிகள் ஆற்றி வரும் குட் சமாரிட்டன் கிளப், புது வாழ்வு சங்கம் இணைந்து நாலுமாவடி கிராம மக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகம் செய்யும் விழா நடைபெற்றது.
டாக்டர் அன்புராஜன் வரவேற்று பேசினார். குடிநீர் திட்டத் தேவையும், நோக்கமும் குறித்து தாமஸ் ஜெயபால் பேசினார். திட்டத்தை சகோ. மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் 25 பயனாளிகள் தொடர்ந்து பயன் பெறுகின்றனர்.ஹெயின் வெஸ்லி நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்திருந்தனர்.


