சாத்தான்குளம் அரசு நூலகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு நூலகம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது முன்னதாக அந்த நூலகம் கோபாலகிருஷ்ண பிள்ளை என்பவரது பெயரில் அவரது சொந்த முயற்சியால் நூலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர் பின்னர் அவர் அந்த நூலகத்தை அரசுக்கு ஒப்படைத்து இலவச நூலகமாக மாற்றப்பட்டது இந்த நூலகத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை நூல்களும் வரலாற்று நூல்களும் உள்ளன
இந்த நூலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிகே ஜெயசீலன் நிதியிலிருந்து ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் பின்பு காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் நிதியில் கட்டடம் கட்டப்பட்டது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் நிதியிலிருந்து சிறுவர் நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் எந்த கட்டடமும் நூலகத்தில் அமர்ந்து படிக்க வாசிக்க போதுமானதாக இல்லை. பழைய பேருந்து நிலையத்தில் 100 ஆண்டிற்கு மேலாக நூலகம் தாழ்வாக அமைந்திருப்பதால் மழை பெய்தால் மழை நீர் உள்ளே புகுந்து வெள்ளக்காடாக ஆகிவிடும்.
இதுகுறித்து பலமுறை நடவடிக்கை எடுக்கக் கோரி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை நூலகத்தில் அமர்ந்து படிக்கின்ற அந்த கட்டிடம் மேற்கூரை ஆஸ்பிட்டாஸ் ஷிட்டால் போடப்பட்டதால் சரியான பராமரிப்பின்றி ஒழுகி உள்ளே தண்ணீர் நிறைந்து விடுகிறது பழைய அரிய வகை புத்தகங்கள் நனைந்து பயன்பாட்டு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது அரசு நூலகத்தைத் திருத்தி அமைத்து நல்லதொரு மேற்கூரை அமைத்துச் சிறப்பாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டு வரவேண்டு எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து நகரக் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞருமான வேணுகோபால் மற்றும் வர்த்தக சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சாத்தான்குளம் அரசு இலவச நூலகம் என்பது 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது கிட்டத்தட்ட சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளும் பயன்படுத்தி வருகின்ற இந்த நூலகம் கேட்பாரற்று மழைநீர் உள்ளே புகுந்து யாரும் உள்ளே போக முடியாத அளவிற்கு அடக்கப்பட்டுக் கிடைக்கின்றது
புத்தகமெல்லாம் பாதுகாக்கும் பணி செய்யப் படுகிறதா என்பது சந்தேகமாக உள்ளது மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே வந்து புத்தகங்களைச் சேதமாகி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நூலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அதை மீட்காத பட்சத்தில் சாத்தான்குளத்தில் மிகப்பெரிய ஒரு அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்


