தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட இணை செயலாளரும், செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலாளருமான சங்கர பாண்டியன், மீனவர் நலம் மற்றும் கால்நடைபாரமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது முன்னாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கருங்குளம் பரமசிவன், செய்துங்கநல்லூர் சக்தி கணேஷ் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


