சாத்தான்குளம் அருகே காதலியைத் திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதால் மகனை அறிவாளால் வெட்டிய தந்தையை போலீஸாா் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு வடக்குத் தெரு பழைய காரன் மகன் சின்னத்துரை (19). இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் வலியுறுத்தி வந்துள்ளாா். ஆனால் அவர் மறுத்து வந்தாராம் .
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பழைய காரன், மகனை அரிவாளால் வெட்டினாராம். இதில், காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சின்னத்துரை அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளர் விஜயதாஸ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


