செய்துங்கநல்லூரில் ரூ.4.92 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி துவக்க விழா நடந்தது. தூத்துக்குடி கிராமப்புற செயற்பொறியாளர் பத்மா, உதவி
செயற்பொறியாளர் சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். புதிய மின்மாற்றியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்துங்கநல்லூர் பஜாரில் கழிவு நீரோடையில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. இதனைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏவிடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். உடனே கழிவு நீரோடையைப் பார்வையிட்ட அவர், கழிவுநீர் சீராகச் செல்ல நடவடிக்கை எடுக்கப் பஞ்சாயத்துத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி. செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் மகேஷ்குமார். எழுத்தாளர்முத்தாலங்குறிச்சி காமராசு, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், மாவட்ட சிஐடியு தலைவர் சுந்தர்ராஜ்,கருங்குளம் ஒன்றிய திமுக
செயலாளர் இசக்கிபாண்டியன். சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் கலிலூர் ரகுமான், ஒன்றிய கவுன்சிலர் குமார்,மைமூன் அப்துல்கரிம் செய்துங்கநல்லூர் பஞ்தலைவர் பார்வதி நாதன், துணைத்தலைவர் சுடலை. ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன்,ராமானுஜம்புதூர் பஞ்தலைவர் ரங்கன்,
காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, கருங்குளம் புங்கன், மாவட்ட துணைத்தலைவர் நயினார். மாவட்டச் செயலாளர் சிவசுப்பிரமணியன்,இலக்கிய அணித் தலைவர் சித்தார்த்தன் உள்படப் பலர் பங்கேற்றனர்.


