தூத்துக்குடி அருகே வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள, சாயர்புரம், செந்தியம்பலம், மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி இசக்கியம்மாள் (47). இவர் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


