ஆறுமுகநேரியில் தனியார் தொழிற்சாலையில் மிஷினில் தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகன் கணேச மூர்த்தி (35). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் வேலைபார்த்து வந்தார். நேற்று பணியில் இருந்தபோது எதிர்பாாரதவிதமாக உப்புக்கலவை மிஷினில் அவர் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


