கோவில்பட்டி அருகே வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலம் ஊராட்சி ராஜீவ் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த செண்பகநாதன் மகன் ஆழ்வாா் (65). இவா் பெங்களூரிலுள்ள மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டு, கடந்த சனிக்கிழமை ஊருக்கு திரும்பினாராம்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 1 பவுன் தங்க மோதிரம் 2, ரூ.5 பணம் ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


