வல்லநாடு அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது. 19 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றி அழிப்பு.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாட்டில் இருந்து மணக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை பகுதியில் ஸ்ரீ வைகுண்டம் சாமியாத்து பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம் பராக்கிராமபாண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி ஆகிய மூவரும் பழங்களை வைத்து கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக ஊறல் தயார் செய்து கொண்டிருந்தனர். அங்குச் சென்ற காவல்துறை 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 19 லிட்டர் கள்ளச்சாராய ஊறலைப் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.


