எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நவீன தாமிரபரணி மகாத்மியம் நூலுக்கு விமர்சனம் -திருக்குறள் மாமலை (தமிழ் ஆங்கில மாத இதழ)
இந்த நூலின் –
தாமிரபரணியை’ கொண்டாடும் விதமாக 12 வருடத்திற்கு ஒரு முறை புஷ்கர திருவிழா நடைபெறுகிறது. 12 புஷ்கரத்திற்கு ஒரு முறை அதாவது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது மகாபுஷ்கரமாகும். இந்த மகாபுஷ்கர விழா 2018 ஆவது வருடம் அக்டோபர் 12 முதல் 23 வரை தாமிரபரணிக்கு நடப்பதைக் கண்ட நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். இந்த சூழலில் வெளியிடப்பட்ட புத்தகமே இந்த நவீன தாமிரபரணி மகாத்மியம். இந்த நூலில் தாமிரபரணிக் கரையோரமாக இருக்கும் 150 முக்கிய தீர்த்தக்கட்டங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது. புத்தகத்தில் உள்ள அனைத்துத் தகவல்களுக்கும் காணொளி வடிவம் கொடுத்துள்ளார்கள். இந்த புத்தகத்தில் இருக்கும் 144 எபிஸோட்களுக்கும் காணொளி மூலம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் கூறியுள்ளார். உலக அளவில் எந்த நதிக்கும் எந்த மொழியிலும் , புத்தகத்திற்கு இப்படி ஒரு யுக்தியை கையாண்டதில்லை. இந்த நூல் தாமிரபரணியை நேசிப்பவர் மட்டுமல்ல எந்த ஒரு நதியையும் நேசிப்பவர்கள் ஒவ்வொருவர்
வீட்டிலும் இருக்கவேண்டிய நல்லதொரு நூலாகும்.மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி
அவர்களும் இதையே வலியுறுத்தி 27 .09. 2020 தமது வானொலி உரையில், நதிகளைக் கொண்டாட ஒரு நாள் குறிக்கப்பட்டு, நதிகள் தினம் என்று கொண்டாட வேண்டும் என்று நதிகளைப் பெருமைப் படுத்தி உள்ளார். 18வது திருக்கை லாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானங்களின் ஆசீர்வாதத்துடன் வெளிவந்துள்ளது இந்த நூல்
மேற்காணும் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். 9543977077


