அன்புச் சகோதரர் (முத்தாலங்குறிச்சி காமராசு) அவர்களுக்கு
வணக்கம் வாழிய நலம்
மதுரை விழாவில் என்னைச் சந்தித்து நேரில் கையளித்த ஆதிச்சநல்லு£ர் வழக்கு எண் 13096/2017 நு£லை படிக்க நேர்ந்தது.
நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு….. என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வண்ணம் தங்களின் ஆதிச்சநல்லு£ர் வழக்கு நூல் அமைந்துவிட்டது. தாமிரபரணிக் கரையில் பிறந்ததால் அந்த மண்ணின் மீது தங்களுக்குள்ள அளவு கடந்த ஈர்ப்பை நன்கு வெளிப்படுத்துகிறது இந்நு£ல். மண்ணிற்காக மன்னர்கள் போரிட்டது அந்தக் காலம். பிறந்த மண்ணிற்காக மண்ணில் மைந்தர்கள் போரிடுவது இக்காலம். உங்கள் மண்ணின் பெருமைகளை அவ்வுலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தங்களின் தளரா முயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் திரு.அழகுமணி உள்ளிட்ட எண்ணற்றவர்கள் தங்களுடன் துணை நின்றதும் ஊடகங்கள் அனைத்தையும் மறவாமல் குறிப்பிட்டிருப்பதும் தங்களின் நன்றியுணர்வை நன்கு புலப்படுத்துகிறது.
இந்நூலின் உள்ளடக்கங்கள் ஆதிச்சநல்லு£ர் ஆய்வுகள் 2004 இல் தொடங்கி சேகரித்த தகவல்கள் படித்த நு£ல்கள் நடந்த கருத்தரங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்நு£லை உருவாக்கியிருப்பதால் அசைக்க முடியாத ஆதாரங்களாக அமைந்து விட்டன.
தமிழர்களின் தொன்மை காத்து அவற்றைப் பறைசாற்றும் முயற்சியில் தங்கள் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போயிருப்பது தங்களின் ஆர்வ ஊற்று என்பேன்.
ஆதிச்சநல்லு£ர் அருங்காட்சியகம் தங்களின் அறிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.
பிறந்த மண்ணை மறந்துவரும் மனித சமுதாயத்தின் நடுவே தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்த உங்களுக்கு அம்மண்ணின் மீது இப்படியிரு தனியாக ஆர்வம் இருப்பது வியக்கவைக்கிறது. நீ என்ன செய்தாய் ஊருக்கு என்கிற கேள்வியையும் என்னுள்ளம் என்னைக் கேட்கிறது.
53 நு£ல்களை எழுதியும் தமிழ் ரத்னா விருதைப் பெற்ற பெருமையெல்லாம் தாண்டியது நீங்கள் ஆதிச்சநல்லு£ர் வரலாற்றை வெளிக்கொணர்ந்த திறம் என நான் உங்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.
கோபம் என்பது கெடுதல் என்பார்கள் உளவியல் அறிஞர்கள். ஆனால் அரசுகளின் பாராமுகம் உங்கள் கோபத்தை அதிகப்படுத்த, இன்று அது நன்மையில் முடிந்துள்ளது.
தமிழையும், தமிழரின் தொன்மையையும் மறைக்கப்பார்க்கும் கூட்டத்தின் மத்தியில் தங்கள் முயற்சிகள் நன்கு வெற்றி பெற்றுள்ளன.
திறக்காத கதவு இது எனச் சோர்ந்து விடாமல் நீங்கள் தொடர்ந்து தட்டிய கதவு, இன்று உலகிற்கே திறந்து விடப்பட்டுள்ளதை உங்களின் அரிய சாதனை என்பேன்.
ஆதிச்சநல்லூர் தமிழரின் பழம்பெருமை பேசும் ஊர் தான். பொய்யுரை இல்லை. ஆனால் இதன் புதுப்புகழ் பேசப்படும் போது, அதன் சரித்திரத்தில் உங்களுக்கான நிலைத்த பெயர் மறக்கப்பட முடியாதது.
நல்வாழ்த்துக்களுடன்.
லேனா தமிழ்வாணன்.


