தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்கற்குளம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடந்தது.
ஆழ்வார்கற்குளம் பஞ்சாயத்து தலைவர் வெங்கேடஷ் இறந்த காரணத்தினால் அந்த இடம் காலியாக இருந்தது. இவ்விடத்துக்குத் தேர்தல் கடந்த 9ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெங்கடேஷ் மனைவி மலை மேகலா, முருகன், அப்பாத்துரை ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் அதிகாரியாகப் பாக்கிய லீலா பணியாற்றினார். மொத்தம் 1199 வாக்குகள் பதிவாகி இருந்தது.
12 ந்தேதி காலை ஓட்டு எண்ணிக்கை செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மலை மேகலா 726 வாக்குகளும், முருகன் 447 வாக்குகளையும், அப்பாத்துரை 6 வாக்குகளையும் பெற்றனர். இதில் 20 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகி விட்டது. 279 வாக்கு வித்தியாசத்தில் மலை மேகலா வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழைத் தேர்தல் அதிகாரி பாக்கிய லீலா வழங்கினார்.
1996 ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலிருந்தது தொடர்ந்து 6 தடவை ஆழ்வார்கற்குளத்தில் பஞ்சாயத்துத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் தான் மூன்று பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


