தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளத்தில் அரசு நியாயவிலை கடை அமைந்துள்ளது. தற்போது நியாயவிலைக்கடையானது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. பழுதடைந்து காணப்படும் நியாயவிலை கடை இப்பொழுது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊர் பொது மக்கள் புதிய நியாயவிலைக் கட்டிடம் கட்டித் தரக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.


