முத்தாலங்குறிச்சி
தாமிரபரணி கரையை சுத்தப்படுத்த
தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டார்
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முள்செடிகளை அகற்றி, அங்கு மரக்கன்று நடுதல் ,கிராமங்களில் கழிவு நீர் சாக்கடைகளை தாமிரபரணியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த மாதம் வல்லநாடு வருகை தந்த மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் அவர்களிடம் மனுகொடுத்தார். அதன் முதல் கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கரைகளை சுத்தப்படுத்தும் பணியை துவங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் உறுதியளித்தார். அதன் படி முத்தாலங்குறிச்சி கிராமத்தில் மிக அதிகமாக குடிநீர் உறிஞ்சு கிணறு அமைக்கப்பட்ட இடங்களின் அருகில் முள்செடிகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையில் முள்செடிகள் அடர்ந்து காணப்படும் இடத்தினை பார்வையிட்டார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, முத்தாலங்குறிச்சி லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விரைவில் மாவட்ட ஆட்சி தலைவரின் ஆலோசனை பேரில் முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையை விரைவில் சுத்தப்படுத்தி மரக்கன்று நட நடவடிக்கை எடுக்க படும் என்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.


