தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்தியத் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார்.. இப்போட்டியில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் ஆரோன் ஜெபஸ் தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் ஜெரிஷ் ஆண்டோ வெண்கலப் பதக்கத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர் . வெற்றி பெற்ற மாணவர்களை மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும் , வட்டார முதன்மை குரு ஜோசப் ரவி பாலன், பள்ளி முதல்வர் பேட்ரிக் அந்தோணி விஜயன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.


