வருகிற (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி தொடங்க உள்ளது. இங்குத் தென்னிந்தியாவிலேயே முதல் முதலில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமய உள்ளது.
2004 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை டாக்டர் சத்திய மூர்த்தி தலைமையில் ஆய்வு செய்தது. தற்போது மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட்டில் அறிவித்தபடி உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க, அடுத்த கட்டமாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற உள்ளது. இங்குப் பொருள்கள் எடுக்கப்பட்டு, அவ்விடத்தில் கண்ணாடி மேல் நின்று அகழாய்வு நடந்த இடத்தினை பார்வையாளர்கள் காணும் வசதியுடன் ஐரோப்பா வில் உள்ள அருங்காட்சியகத்தினை மாதிரியாகக் கொண்டு அமைக்க உள்ளனர், இந்தியத் தொல்லியல் துறையினர். இதற்காகத் திருச்சி தொல்லியல் மண்டல கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு தற்போது நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான உழைத்த மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையிலான அனைத்து தொல்லியல் அலுவலர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும். பிரதமர் மோடி அவர்களுக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அவர்களுக்கும், உதவி ஆட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்பட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.


