ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் இடி இடித்தது பின்னர் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.. மேலும் ஆழ்வார்திருநகரி பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


