விளையாட்டில் திறமையான கிராமப்புற இளைஞர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதே இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறையின் நோக்கம் என்று சகோ. மோகன் சி. லாசரஸ் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை விளையாட்டுத் துறை சார்பில் வடக்கு நல்லூரில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஊர் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அர்ஜூனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன்,விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி.லாசரஸ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசியதாவது: நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பாய் என்ற வாக்குத்தத்தம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு கபடி வீரர் மணத்தி கணேசன் என்று சொன்னால் அவர் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதுவே ஒரு பெரிய ஆசீர்வாதம். வடக்கு நல்லூர் கிராமத்திற்கு ஊழியத்திற்கு வந்த நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியக்குழுவினர்களிடம் இளைஞர்கள், சிறுவர்கள், ஊழியக் குழுவினர்களிடம் அன்பாய் பேசினது, நடந்து கொண்ட விதம் ஊழியக்குழு வினர்களின் உள்ளத்தைத் தொட்டது.
இதுகுறித்து இந்தக்கிராம இளைஞர்கள்,சிறுவர்களுக்கு ஏதாவதுசெய்யனும் என்று என்மேலாளரே என்னிடம் பரிந்துரை செய்ததின் பேரிலும் இந்தக் கிராமத்தில் முக்கியமாகப் புனரமைக்கப்பட்ட நூலகத்தில் நிறைய கேடயங்கள் கோப்பைகள் பெற்று சாதனை படைத்திருப்பதைப் பார்த்ததில் இந்த கிராமத்தில் நல்ல தாலந்துள்ள சாதனையாளர்கள் உள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்தினால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் சாதிக்க முடியும்.இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்கத்தான் நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறையை உருவாக்கி வைத்துள்ளோம்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். இளைஞர்கள் சிறுவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.நன்றாக விளையாட வேண்டும்.கபடி,கோ-கோ, அத்லட்டிக் எதில் விருப்பமோ அதைத் தேர்ந்தெடுத்து பயிற்சி எடுத்து சாதனையாள ராக மாற வேண்டும். இந்த கிராமத்திலுள்ள இளைஞர்கள் நல்ல பயிற்சி கொடுத்து வருவதைப் பாராட்டுகிறேன். மேலும் நல்ல இயற்கை சூழு;நிலையில் இந்தக்கிராமம் உள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.நல்ல குளம் உள்ளது.குளத்தில் குப்பைக்குளங்களை கொட்டக் கூடாது.
குளத்தின் கரையில் கூட குப்பைகளைக் கொட்டக் கூடாது. சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நன்மை செய்யுங்கள் என்று இயேசு சொன்னதின் படி எங்களால் முடிந்த சின்ன, சின்ன நன்மைகள் செய்து வருகிறோம். வடக்கு நல்லூர் கிராமத்திலுள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில், கல்வித்துறையில் சாதனை படைத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஊர் பிரமுகர்கள் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன், ஏ.சி.எஸ். கபாடி குழுவினர், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


