அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
உடன்குடி அருகிலுள்ள தண்டுபத்து தொகுதி அலுவ லகத்தில் அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப் புத்துறைஅமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் 69-வதுபிறந்த தின விழா அவரது சொந்த கிராமமான தண்டுபத்து கிராமத்தில் சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநில துணைத் தலைவர் நாசரேத் நிக்சன், கே.டி.சி.ஸ்டீபன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.க.வேணுகோபால், சாத்தை மகராஜன், ஆ.க.கவிதன் மற்றும் கத்தோலிக்க பாதிரியார்கள், சி.எஸ்.ஐ. பாதிரியார்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொன்னாடை, சந்தன மாலை, மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


