திருச்செந்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5¼ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரராக புரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கார்த்திக் (31). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். நேற்று ஊர் திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவில் கிடந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5¼ பவுன் நகைகள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


