ஸ்ரீவைகுண்டம் தாலுகா, எல்லைநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்கு உள்பட்ட செட்டிமல்லன்பட்டி கிராமத்தில் கோகுலக்கண்ணன் கோயில் 12ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிறிய மாட்டு வண்டிக்கான தூரம் 5 கிலோ மீட்டராகவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கான தூரம் 6 கிலோமீட்டராகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் நெல்லை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து 62 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலாக நடந்த சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தொழிலதிபர் முருகேசபாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் 28 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் வல்லநாடு சிவபார்வதி பங்களா வண்டி முதல் பரிசை தட்டி சென்றது. இரண்டாவது பரிசை பாலாஜி சிந்தலக்கரை மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசை மருகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டி வெற்றி பெற்றது.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 34 வண்டிகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டன. முதல் பிரிவில் ஒருபோட்டியை பத்மநாபமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் வைகுண்ட பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பூஞ்சிட்டு மாட்டு வண்டி இரண்டாவது பிரிவில் உள்ள மாட்டு வண்டி ராலீஸ் ஜெகன் தூத்துக்குடி நகர தலைவர், தமிழ்நாடு யாதவர் பேரவைத் தலைவர் மரியா சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் தேனி ஒத்தக்கடை கறிக்கடை நாகராஜன் வண்டியும், இரட்டை திருப்பதி ராஜா ஆகியோர் வண்டியும் முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை வள்ளியூர் ஆனந்த் வண்டியும், வல்லநாடு சிவபார்வதி பங்களா வண்டியும், முன்றாவது வல்லநாடு சிவபார்வதி பங்களா வண்டியும் தட்டி சென்றது.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கு 20 ஆயிரம் பரிசை தொழிலதிபர் முருகேசப்பாண்டியன் வழங்கினார். இரண்டாவது வந்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு சிந்தலக்கட்டை பாலாஜி எல்லை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மங்களா சுந்தரி சின்னதம்பி ரூ 15 ஆயிரம் பரிசாக வழங்கினா. மூன்றாவது பரிசை மருவகுறிச்சி சுப்பம்மாள் 10, ஆயிரம் வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி முதல் இடம் பிடித்த உரிமையாளர் தேனி ஒத்தக்கடை கறிக்கடை நாகராஜனுக்கு ரூ.7,500ம், இரட்டைதிருப்பதி ராஜாக்கு ரூ.7,500ம் சமமாக பரிசை பிரித்து, பத்மநாபமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் வைகுண்டபாண்டியன் வழங்கினார்.
இரண்டாவது பரிசை இருபிரிவு பூஞ்சிட்டு மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு யாதவர் பேரவைத் தலைவர் மரிய சுந்தரம் ரூ 5, ஆயிரமும், தூத்துக்குடி நகர யாதவர் சங்கத் தலைவர் ராலீஸ் ஜெகன் ரூ 5 ஆயிரமும் சமமாக பிரித்து வழங்கினார். முன்றாவது பரிசை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கு கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன் ரூ7 ஆயிரம் வழங்கினர். மற்றும் ஆறுதல் பரிசை மாட்டு வண்டி உரிமையாளருக்கு வனத்துறை வல்லநாடு சரவணன் மற்றும் செட்டிமல்லன்பட்டி செல்வமுருகன் ஆகியோர் வழங்கினார்கள்.


