திருநெல்வேலி முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் அனேக தெற்கு பகுதிகளுக்கு செல்லும் திருச்செந்தூர் சாலையின் விரிவாக்க பணிகள் நடைபெறுவதனால் செய்துங்கநல்லூர் முதல் V M சத்திரம் வரையிலான சாலை தற்போது மூடப்பட்டு பேருந்து முதலான அனைத்து வாகனங்களும் செய்துங்கநல்லூரில் இருந்து அனவரதநல்லுர், வசவப்பபுரம் சாலையில் மாற்றி விடப்பட்டுள்ளது. இந்த சாலையானது ஒரு வழி பாதையாக உள்ளதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகி செல்ல முடியாமல் மாட்டி கொள்கிறது. இதனால் மிக பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் எற்ப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். மேலும் அவசரமாக வெளியூர் செல்பவர்களும் , அவசரமா செல்லும் ஆம்புலன்ஸ் வாகனமும், நோயாளிகளும் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே அரசு இந்த ஒரு வழி பாதையை சற்று அகலபடுத்தி ஒரு வழி பாதையை இரு வழி பாதையாக மாற்றினால் திருச்செந்தூர் சாலையில் எதாவது காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் இந்த வசவப்பபுரம் சாலையை மக்கள் பயன்படுத்தி எளிதாக சென்று வர முடியும்.எனவே இது தொடர்பாக ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.


