சாத்தான்குளம் பஜார் பகுதி ஒரு வழிப் பாதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாலை விதிகளை மீறி ஒருவழிப் பாதையில் கனரக வாகனங்கள் நுழைந்து அதிவேகமாக வருவதால் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாத்தான்குளம் மெயின் பஜாரில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாத்தான்குளம் காவல் துறையினர் சாத்தான்குளம் சிஎஸ்ஐ சர்ச் அருகில் போக்குவரத்துக்கு காவலரை நியமித்து ஒரு வழிப்பாதையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சாத்தான்குளம் பகுதி வணிகர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


