முறப்பநாடு அருகே கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு நாணல்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22) என்பவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் வைத்து கடந்த 12.09.2019 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 16பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் 2வது எதிரியான முறப்பநாடு பக்கபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த இலையில் கடந்த 11.08.2021 அன்று முறப்பநாடு போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் எதிரி மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மாரிமுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


