தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்த சதாசிவன் மகன் பாரதிக்குமார் (23), குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தங்க மூர்த்தி (24), குளத்தூர் மேற்கு தெருவை சேர்ந்த மாடசாமி (எ) ராஜா மகன் மாரீஸ்வரன் (28), அதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சதுரகிரி (30) மற்றும் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாசரேத் திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் இசக்கிமுத்து (40) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேற்படி 5 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


