தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சமூக நீதிக்கான தந்தைபெரியார் விருது பெறுவோருக்குரூ.1,00,000/- (ரூபாய் ஒருலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வுசெய்யப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழகஅரசின் ‘சமூகநீதிக்கான தந்தைபெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டுஎய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்டஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம் தங்களின் சுய விவரம்,முழு முகவரி,தொலைபேசிஎண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்தவிவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2021 ஆகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


