கருங்குளத்தில் தவறவிட்ட பணத்தை கண்டுபிடித்து உரிய நபரிடம் செய்துங்கநல்லூர் போலிசார் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் இவர் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 24ம் தேதி கோவில் கொடைக்காக சொந்த ஊரான அரசர்குளத்திற்கு வருகை தந்தார். அப்போது கருங்குளத்தில் பர்சை தொலைத்து விட்டார். இதுகுறித்து அவர் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிசார் அதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிர கண்காணித்து விசாரணை செய்ததில் 1500 ரூபாய் மற்றும் பர்சில் இருந்த எடிஎம் மூலம் 40 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்த பணத்தையும் பர்சை எடுத்தவர்களிடமிருந்து போலிசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோவில் கொடை விழா முடிந்து மும்பைக்கு சென்று விட்டதால், பணத்தை எடுத்தவர் குறித்து ராஜன் வழக்குபதிவு செய்ய வேண்டாம் என்று கூறியதன் அடிப்படையில் பணத்தை எடுத்த இரண்டு பேரையும் போலிசார் எச்சரித்து அனுப்பினர்.
பின்னர் 42 ஆயிரம் ரூபாயையும் ஏடிஎம் கார்டையும் ராஜனின் உறவினரான ராமசாமி என்பவரிடம் பயிற்சி டி.எஸ்.பி.சியமளாதேவி, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், எஸ்.ஐ.சதீஷ், எஸ்எஸ்ஐ.ரவிச்சந்திரன், தலைமை காவலர் காசிராஜன் ஆகியோர் ஒப்படைத்தனர்.
அதிரடியாக விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு பணத்தை மீட்ட போலிசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


