கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் புதியடிரான்ஸ்பார்ம் அமைக்கவேண்டும் என உங்கள் தொகுதியில் முதல்வர் 100நாள் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில்கோரிக்கை வைக்கப்பட்டது.மற்றும் பல இயக்கங்கள், சங்கங்கள், வெளிநாடு வாழ் பண்ணை வாசிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை செயல் வடிவமாகக்கும் முயற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் அவர்கள் துடிப்புடன் செயல்பட்டு
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில்100நாளில் நடவடிக்கை என்ற திட்டத்தில் விரிவானகோரிக்கை வைத்தார்.
100 நாளில் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் 100தரவிட்டதன் பேரில்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் இரு புதியடிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணி நடந்தது. ஶ்ரீவைகுண்டம் மின்பகிர்மான வட்டம், ஊரகக் கோட்டம் ஶ்ரீவைகுண்டம் உபகோட்டத்திற்கு உட்பட்ட ஶ்ரீவைகுண்டம் ஊரகப்பிரிவு ஆறாம்பண்ணை கிராமத்தில் குறைவான மின் அழுத்த குறைபாடுகளை நீக்குவதற்காக 25 கே.வி.ஏ மின் திறன் கொண்ட இரண்டு புதிய டிரான்ஸ்பார்ம் பொருத்துவதற்காகரூ13லட்சத்து 40ஆயிரம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு
ஆறாம்பண்ணை கிராமம் அராபாத்நகர் காலனி தெருவில் 25 கே.வி.ஏ மின் திறன் கொண்ட
புதியதாக இரண்டு மின் கம்பங்கள் நடப்பட்டு புதிய மின்வழித்தடங்கள் அமைத்து விஸ்தரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது இதனையடுத்து மின் மாற்றி மின்கம்பங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கபபட்டது.ஊரகக்கோட்டத்தின் செயற்பொறியாளர்பத்மா அவர்கள் . இந்த இரண்டு டிரான்ஸ்பார்மரை ஊராட்சி மன்ற தலைவர்சேக்அப்துல்காதர் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீவைகுண்டம் உதவி செயற் பொறியாளர் சந்திரன் , உதவி மின்பொறியாளர்கள் விஜயலெட்சுமி , ரமேஷ் , கணேஷ், மின்ஊழியர்கள்
ஆறுமுகம் ,ராஜகோபால் , மாரியப்பன் , வீரபெருமாள் , மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர்.
உபதலைவர் கனி,முஹைதீன் பள்ளி செயலாளர் மொன்னாமுகம்மது, வார்டு உறுப்பினர்கள் முஹம்மது இப்ராஹிம் , மகேஷ் , அரபாத்நகர் பள்ளிவாசல் செயலாளர்
அப்துல் காதர் ,பள்ளிவாசல் இமாம் ஜாபர் அலி , காஜாமைதீன், சாகுல் ஹமீது , மதார்முகைதீன் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


