
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் ஆழ்வார்திருநகரி ஐஸ்வர்யா கல்யாண மண்டபத்தில் நடந்தது.
தென்திருப்பேரை வட்டார தலைவர் செம்பூர் கருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து வரவேற்புரை ஆற்றினார். வல்ல நாடு வட்டார விவசாய ஆர்வலர் குழு தலைவர்கள் தம்பான், தங்கபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் கல்வி அறக்கட்டளை ஆலோசகர் முனைவர் ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மழவை ராஜேந்திரன், செம்பூர் அற்புதராஜ் ஆழ்வார்திருநகரி முருகன் மற்றும் வேம்பரசன், மாரியப்பன், தேமாங்குளம் மாணிக்கம், உடையார் குளம் பஞ்சாயத்துத் தலைவர் தேவராஜ், மழவைப் பஞ்சாயத்துத் தலைவர் மாரியம்மாள், தேவராஜ், ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென்கரை பெரியகுளம் மற்றும் தேமாங்குளம் ஆகிய பாசன குளங்களைத் தூர்வாருதல், வாய்க்கால்களைத் தூர்வாருதல், குளக்கரைகளில் பலன்தரும் மரங்களை நடவு செய்தல், வேளாண் பொருட்களை மற்றும் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விவசாய ஆர்வலர் குழுக்களை உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாயி சரவணன் நன்றி கூறினார். அரசு விதிகளின்படி சமூக இடைவெளியுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.