தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் நாளை அப்ரண்டிஸ் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் நாளை (7ம் தேதி) காலை 9 மணிக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. ஐ.டி.ஐ.யில் பயிற்சி முடித்து அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 18 வயது முடிந்த பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


