சுதந்திர தினவிழாவில்
ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு
மாவட்ட ஆட்சி தலைவர் சான்றிதழ்
சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் தேசிய கொடியேற்றி வைத்து, சமாதான புறா பறக்கவிட்டார். அதன் பின் வருவாய் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோவிட் 2 அலையில் சிறப்பாக பணியாற்றிய வகைக்கும். 100 நாள் மனு தீர்வு வகைக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் இந்த பாராட்டை தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.


