தூத்துக்குடி அருகே தம்பி வீட்டில் 4¼ பவுன் தங்க நகையை திருடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம், செந்தியம்பலம், கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அலெக்ஸாண்டர் (34). இவரது வீட்டிற்கு கடந்த 5ம் தேதி அவரது அண்ணன் பாண்டி என்பவர் வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்த 4¼ பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் அலெக்ஸாண்டர் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திருமலை முருகன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் நகை திருடிய பாண்டியை கைது செய்தார். அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.


