குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று வெள்ளிக்கிழமை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்


