வல்லநாடு சிவன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. வல்லநாட்டில் பழமை வாய்ந்த ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஆவுடை அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது. அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் சந்தோஷ் பப்டர் மற்றும் ஹரி பட்டர் சிறப்பு அலங்கார ஆரத்தி காட்டினர். பக்தர்கள் ஓம் சக்தி ஆதி பராசக்தி என்று கோஷமிட்டனர்.ஏற்பாடுகளை திருமூல பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


