இன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலகு மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் திருவை குண்டத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் செல்வி பிரியங்கா முன்னிலை வகித்தார் ஒன்றிய சேர்மன் வசந்தா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் , ஆன்றோ அவர்கள் தலைமை வகித்தனர் 300 கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.பின்பு பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திருவை குண்டம் சட்ட மன்ற உறுப்பினர் அமிர்த ராஜ் அவர்கள் பயிற்சி ஆணை வழங்கினார். வட்டார இயக்க மேலாளர் நன்றியுரை வழங்கினார் இந்த முகாம் ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளரான ஜெயலெட்சுமி பத்மா மகேஸ்வரி உமாகனி பிளாரிடா ஜெபசீலி வள்ளியம் மாள் ஆகியோர் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்


