கருங்குளத்துக்குப் பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ஐகிரவுண்ட் வழியாக பேருந்து விட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் ஏற்பாடு செய்தார். அதன் படி தற்போது கருங்குளத்துக்குப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் நன்றி கூறினர். ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. இதில் செல்லத்துரை, சுயம்பு ஆகியோர் தலைமையில் ராமச்சந்திரன், ஜெபமணி பொன் ராஜ், ஜான்லி, காசி ராமன், காமராஜ், லெட்சுமணி, பெருமாள் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


