சேரகுளம் அருகே
ரேடியோ செட் காரர் வீட்டில்
திருடிய நகையைத் திருப்பிக் கொண்டு போட்ட திருடன் – பரபரப்பு
சேரகுளம் அருகே வல்ல குளம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). இவர் இந்த பகுதியில் ரேடியோ செட் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 22 ந்தேதி இவர் தொழிலுக்காக வெளியூர் சென்று விட்டார். இவர் மனைவி ஜெயராணி பீடிகடைக்கு சென்று விட்டார். வழக்கம் போல வீட்டில் உள்ள சாவியைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துச் செல்வது வழக்கம் அதுபோலவே நேற்றும் வீட்டுச் சாவியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டுச் சென்றார். அதன் பின் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டில் வந்து பார்த்த போது அவர் பீரோவில் வைத்த நகை காணாமல் போய் இருந்தது. இது குறித்து பாலகிருஷ்ணன், சேரகுளம் போலீஸ் ஸ்டேஷனின் புகார் செய்தார். சேரகுளம் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா மற்றும் கிரைம் போலி சார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை எடுத்தனர். தொடர்ந்து போலி சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். களவு எடுத்தவர் இவர்கள் வீட்டைப் பற்றி நன்கு தெரிந்தவர். எனவே அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்பவர்களே திருடி இருக்கவேண்டும். அல்லது திட்டமிட்டு வெளியூரிலிருந்து வந்து திருடினார்களா எனப் பல கோணத்தில் போலி சார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று காலை ஜெயராணி தனது வீட்டு காம்பவுண்ட் சுவரில் உள்ள பூந்தொட்டியில் தண்ணீர் ஊற்றும் போது சாணி உருண்டையில் ஜெயின் இருப்பதைக் கண்டார். உடனே அவர் போலிசுக்கு தகவல் கொடுத்தார். ஸ்ரீ வைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சேரகுளம் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஒரு மாலை மற்றும் மூன்று கொத்து ஜெயினை கைப்பற்றினர். இந்த நகையைத் திருடியவர், போலிசுக்கு பயந்து வீட்டுக்குள் போட்டு விட்டுச் சென்றதாக முதல் கட்ட போலிஸ் விசாரணையில் தெரிந்தது. மேலும் மீதி உள்ள 5 பவுன் நகையையும் திருடியவர்களையும் போலி சார் தேடி வருகிறார்கள். காணாமல் போன நகையைத் திருடனே திருடிய வீட்டில் கொண்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


