செய்துங்கநல்லூர் அருகே
தொழில் வழித்தடத்திற்காக 100 வருடம்
பராம்பாரியம் மிக்க மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
செய்துங்கநல்லூர் அருகே தொழில் வழித்தடத்திற்காக 100 வருடம் பராம்பாரியம் மிக்க மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 13 ந்தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் திருச்செந்தூரில் தொடங்கி வைத்தார்.
இதற்கான பணி தற்போது மிக விரைவாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து வி.எம் சத்திரம் வழியாகப் பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பீட்டிலும் கோபால சமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடி மதிப்பீட்டிலும் சென்னை – கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காரிடார் திட்டத்தின் கீழ் (தொழில் வழித்தடம்) மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படும் பணி துவங்கியுள்ளது.
ஏற்கெனவே உள்ள சாலையில் இருக்கும் வளைவுகள் நேர் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சாலைப் பணிகள் 2 ஆண்டுக் காலத்துக்குள் முடிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும். அதற்காகச் சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இந்த சாலை 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.
நில எடுப்பு செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வி.எம்.சத்திரத்திலிருந்து சாலைகளில் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்படும் பணி விரைவாக நடைபெறுகிறது. நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், ஆரோக்கியநாதபுரம், ஆச்சிமடம் உள்படப் பகுதியில் நேற்று முன்தினம் மரங்கள் அகற்றப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது. இதனால் 100 வருடங்கள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டது. நகர வளர்ச்சிக்காகவும் நாடு வளர்ச்சிக்காகவும் சாலைகள் அகலபடுததும் பணிக்கு மரங்கள் வெட்டப்பட்டாலும் கூட, மரம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் சாலைகள் பார்ப்பதற்கு எதையையோ இழந்தது போல உள்ளது.
பாக்ஸ் போடலாம்.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற தாரக மந்திரம் தற்போது உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சாலை விரிவாக்கத்துக்காக தற்போது இந்த பணிக்காகப் பல்லாயிரம் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இது நாட்டுக்கு பெரும் இழப்பாகும். ஆனாலும் நெடுஞ்சாலைத் துறையினர் ஒவ்வொரு மரத்துக்கும் மூன்று மரங்கள் விதமாக வைத்து வளர்க்க வேண்டும். இதனால் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டதற்கு அஞ்சலி செலுத்துவதுடன் வருங்கால இயற்கையைப் பேணுவதற்கு ஏதுவாக இருக்குமென சமூக சேவகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.