ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் அமைந்துள்ளது பொன்னுறுதி அம்மாள் சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் பைரவர் சட்டநாதர் அம்சத்தில் உள்ளார். எனவே இந்த ஆலயம் மிகவும் சிறப்பு பெற்றது.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு இன்றைய தினம் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் வருகை தந்தார். அவர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அவருடன் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுமாநில பயிற்சியாளர் உமாசங்கர், பாஜக நெல்லை பொறுப்பாளர் நாகராஜன் ஆகியோர் சட்டநாதர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.


