. . வல்லநாட்டில் ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமையான அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் முப்பீட தலங்களுள் ஒன்றாகும்.நவலிங்கபுரம் என்று அழைக்கப்படும் சிவன் கோவில்களில் முதலாவது ஆகும், சீமாறன் சீவல்லப பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுவர் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் 21, 22, 23 மற்றும் மார்ச் மாதத்தில் 2 1 , 22, 23 தேதிகளில் மூல ஸ்தானத்தில் உள்ள சிவன் மீது சூரிய ஒளி விழும். மார்ச் மாதம் 23ஆம் தேதியான நேற்று இந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனைக் காண அதிகாலை 5 மணிக்கு ப் பக்தர்கள் திரளாக வந்தனர் சரியாக 6 மணிக்கு சூரியனின் சிவந்த ஒளிக்கதிர்கள் சிவன் மீது விழுந்தது.பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருச்சங்கு முழக்கத்துடன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்தி கோஷமிட்டனர் தொடர்ந்து அர்சகர் சண்முகசுந்தர் பட்டர் தலைமையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்


